Friday, February 20, 2009

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?.

ஏன்,எதற்கு,எப்படி என்று கேள்வி கேட்பதே பகுத்தறிவு என்று சொன்னது தி,க,பெரியார் என்று நினைத்தால் தவறு.இந்த கேள்விகளை பழங்காலத்திலேயே கேட்க்கத்தூண்டியது நம்முடைய ஆன்மிகம், எடுத்துக்காட்டாக இதே கேள்விகளை பாரதப் போரின் போது அர்ஜுனன் கேட்ட போது அதிகப்பிரசங்கி வாயை மூடு என்று சொல்லாமல்,அதற்கு பகவான் கிருஷ்ணன் விளக்கம் அளித்ததால் நமக்கு கிடைத்ததே பகவத் கீதை.அந்த வழியில் நாணும் சில கேள்விகளை சிலரை நோக்கி வைக்க ஆசைப்பட்டே இந்தப் பதிவு.

பகுத்தறிவு பகலவன்களுக்கு 10 கேள்விகள்?.
1, கடவுள் இல்லை,இல்லவே இல்லை என்று கல்வெட்டுக்களும்,கொடிக்கம்பங்களும் இந்து ஆலயங்களின் எதிரே மட்டும் வைப்பது ஏன்? (இந்துக் கடவுள் மட்டுமே இல்லை என்று சொல்ல நினைப்பதாலா? மசூதி முன்பும்,தேவாலயம் முன்பும் வைத்தால் அவர்கள் இந்துக்களைப் போல் அமைதியாய் இல்லாமல் வீறு கொண்டு தாக்குவார்கள் என்பதாலா?)

2) கடவுளை மற,மனிதனை நினை. என்று சொல்லும் நீங்கள் இனம்,மொழி என்று அரசியல் செய்வது ஏன்? (தமிழன் இல்லாத வேறு எவறும் மனிதன் இல்லையா?)

3) கடவுள் இல்லை என்று சொல்லும் இயக்கத்தின் தலைமை இடமாம்,பெறியார் திடலில் கிருத்துவ மத பிரச்சாரங்களுக்கு இடம் அளிப்பது ஏன்?(ஒரு வேளை கிருத்துதான் உண்மையான கடவுள் என தி.க. நினைக்கிறதா? இல்லை கொள்கையைக்காட்டிலும் பணம் முக்கியம் என நாத்திகம் சொல்கிறதா?)

4) பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பனை அடி என்று சொல்லிவிட்டு,பார்ப்பன நண்பர்களை (பெரியாருக்கு ராஜாஜி,கலைஞருக்கு கல்கி,ராமமூர்த்தி இன்னும் பல)வைத்திருப்பதுதான் பெரியாரின் நாத்திகமா?

5) மாரியம்மனுக்காக தீ மிதிப்பதையும்,தமிழ்க் கடவுள் முருகனுக்கு அலகு குத்துவதையும் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிவிட்டு,அதை கண்டிக்கும் தி.க. முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் முகரம் நாளில் உடலில் கத்தி,மற்றும் பயங்கர ஆயுதங்களால் தங்களை வருத்திக் கொள்ளும் செயலை மூட நம்பிக்கை என்று கண்டிக்காமல் இருப்பதுதான் நவீன நாத்தீகமோ?

6) பல பெரியோர்களின் எழுத்துக்களும் நாட்டுடைமை ஆக்கப்படும் போதும்,பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்க விடாமல் தடுத்து,காசு பன்னும் செயல்தான் பகுத்தறிவு பிரச்சாரமோ?

7) திராவிடன் என்று சொல்லி இயக்கம் ஆரம்பித்து,பின் திராவிட இனத்தில் ஒன்றான மலையாள M.G.ராமச்சந்திரனையும்,தெலுங்கன் விஜயகாந்தையும்,கன்னடன் ரஜினியையும் பிரித்து பேசுவது எந்த வகை திராவிடம்?

8) தமிழக மக்களுக்காக சல்லிக்காசை கூட செலவு செய்யாமல்,பெரியாரின் சொத்துக்களை எல்லாம்,தேர்ந்த தொழிலதிபர்களைப் போல்,கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்து விட்டு, சென்னை மக்களின் தாகம் தீர்க்க தெலுங்கு கங்கை திட்டத்திற்க்கு சாய் பாபா பல 100 கோடிகளை தரும் போதும்,தமிழக கிராமங்களில் மறுமலற்ச்சிக்காக ஜக்கி வாசுதேவ் பெறும் முயற்சி செய்வதையும் பார்தும்,சூடு,சொரனை இல்லாமல் இருப்பதுதான் நாத்திக வழியா? இதுதான் தமிழனின் தன்மான இயக்கமா?

9) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்ஆலயம் தொழுவது சாலவும் நன்றுஎன்று வாழ்ந்து வந்த நம் தமிழர்களை,இந்தி எனும் அரக்கி வரக்கூடாது என்ற பெயரில் போராட்டம் நடத்தி,அன்னிய ஆங்கிலத்துக்கு நடைபாதை விரித்து தந்து,இன்று எங்கும் ஆங்கிலம்,எதிலும் ஆங்கிலம்,அழகு தமிழனின் வீட்டினுள்ளும் அன்னைத்தமிழ் அழித்து அன்னிய ஆங்கிலம் எனும் நிலையை உருவாக்கியதுதான் பகுத்தறிவு இயக்கத்தின் சாதனையோ?

10) இலங்கை மண்ணில் எம் இனத் தமிழர் சிங்களனின் அராஜகத் தாக்குதலில் அழியும் போதும், அண்ணண் கலைஞரின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து,அன்னை இந்திராவின் அன்னிய மருமகள், இத்தாலி சோனியாவுக்கு வால் பிடிப்பதுதான்,அதிகாரத்தின் சுவையை நக்கிப் பிழைக்கும் நாத்தீகமோ?
எனது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பின்னுட்டத்தில் வசை மொழிதான் பகுத்தறிவாளர்களால் இடப்படும் என்று தெரிந்தும் இன்தப் பதிவு,
என் கேள்விகள் தொடரும்
பகுத்தறிவு குஞ்சு பதிவாளர்களுக்கும்.

9 comments:

சரவணகுமரன் said...

சுள்ளுன்னு இருக்கு...

ஆனந்தன் said...

தங்கள் வருகைக்கும்,பின்னுட்டத்திற்க்கும் நன்றி திரு.சரவணகுமரன் அவர்களே

Anonymous said...

ஆனந்தன் பின்னி பெடல் எடுத்து விட்டீங்க போங்க... கையை கொஞ்சம் கொடுங்க.... வாழ்த்துக்கள்...

ஆனந்தன் said...

நன்றி திரு அருண் பிரசங்கி,இவர்களுக்காண உங்கள் கேள்விக்கனைகளையும் தொடுங்கள்,

Unknown said...

ஏமாற்றுவ‌தையே தொழிலாக‌வும், பொய் ,பித்தாலாட்ட‌ம் சுய‌ விள‌ம்ப‌ர‌ம் இவ‌ற்றோடு த‌மிழ் மொழியை ஒரு வியாபார‌ பொருளாக்கி பிழைப்பு ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் தான் ந‌ம் த‌மிழ‌க‌த்தின் நாத்திக‌வாதிக‌ள்.

இந்த‌ ப‌குத்த‌றிவு குஞ்சுக‌ளுக்கு சாட்டைய‌டி கொடுத்துள்ளீர்க‌ள்..

Anonymous said...

kadaul illai endru solluvathai vida,hindukkalin vaalvil ulla mooda palakkagngali virattave periar munainthaar.aanaal neengal ketpathu pola islam (allaatha)muharram pandihai in pothu nadakkum mooda palakkangalai islaame ethirppathaal avar vittu iruppaar...


Razin Dubai

c.kandasamy said...

நண்பா நீ நம்ம ஆளுப்பா. போட்டுத்தள்ளிட்ட போ. நம்ம சாக்கடை நாத்திக்ஸ் இந்த அறிவுள்ள இடங்களிலெல்லாம் நிற்கமாட்டார்கள். அவர்களது மக்களின் அறிவின்மை அல்லது எதிர்க்க துணிவின்மை என்கிற முதலீடே ஆகும்.உன்னை மாதிரி தொடர்ச்சியாக அந்த காலிகளை தாக்கி விரட்டி நாட்டை விட்டு ஒழிக்கவேண்டும் அப்பொழுதுதான் மழை பெய்யும். ரொம்ப நன்றிப்பா.

வால்பையன் said...

இந்த பதிவிற்கு நான் போட்ட கமெண்ட், ஒன்று அழிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது வெளியிடப்படாமல் வைத்திருக்க வேண்டும், எனக்கு மெயில் பாலோ அப் ஆகுதே!

வால்பையன் said...

திரு கந்தசாமி சொல்லியுள்ள ”காலி” என்ற வார்த்தை போலி நாத்திகவாதிகளை குறிப்பதாக எடுத்துக்கொள்கிறேன்!

Post a Comment